தேசிய டெலி-மெண்டல் ஹெல்த் திட்டம் மற்றும் கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண்ணை விரைவில் தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதாக பிடிஐ தெரிவித்துள்ளது. இதன்மூலம் மனநல உதவிகளை நாட்டு மக்கள் எல்லா இடங்களில் இருந்தும் எளிதில் அணுகுவதற்கு வாய்ப்புள்ளது.
டெலி-மனஸ்
"கொரோனா தொற்றுநோய் அனைத்து வயதினருக்கும் மனநலப் பிரச்சனைகளை அதிகப்படுத்தியுள்ளது. தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்த, 'தேசிய தொலைபேசி மனநலத் திட்டம்' தொடங்கப்படும்," என்று அவர் கூறினார்.
முக்கிய மையமாக 23 டெலி-மெண்டல் ஹெல்த் சென்டர்கள் தொடங்குவதற்கு பெங்களூருவின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIITB) மற்றும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS) ஆகியவை தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றன. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் குறைந்தபட்சம் ஒரு 'டெலி-மனஸ்' (டெலி-மென்டல் ஹெல்த் அசிஸ்டன்ஸ் மற்றும் நேஷனல்லி ஆக்ஷன் பிளான்) செல் நிறுவப்படும்.
மேலும் ஐந்து பிராந்திய ஒருங்கிணைப்பு மையங்கள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பொதுவாக ஒரு கட்டணமில்லா ஹெல்ப்லைன் எண் அமைக்கப்படும், அழைத்தபின் சேவைகளைப் பெறுவதற்கு முன் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும். அதன்பிறகு அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள டெலி-மனஸ் செல்களுக்கு அழைப்புகள் அனுப்பப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கோரோனாவால் மனசோர்வு
கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட லான்செட் ஆய்வின்படி, 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட COVID-19 தொற்றுநோய் காரணமாக மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகள் இந்தியாவில் சுமார் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டை விட 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் எய்ம்ஸ் மனநல மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ் சாகர் இந்த ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்விலும் மருத்துவரீதியாக கண்டறியக்கூடிய மனநலக் கோளாறால் பாதிக்கப்படுவதாக கூறி இருந்தார். இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மன அழுத்தம் ஏற்பட காரணங்கள்
மேலும், கோவிட்- 19 தொற்றுநோய் ஒட்டுமொத்த மக்களின் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று, அவர் தனது ஆய்வில் கூறினார். மேலும் பேசிய அவர், "மனநலம் தொடர்பான கோவிட்-19 தற்போது பரவிக்கொண்டிருக்கிறது. நீண்ட கால சமூக இடைவெளி நெறிமுறைகள், நோய் பயம், மரணம் மற்றும் எதிர்காலத்தை கணிக்க முடியாத தன்மை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இழப்பு, பொருளாதார வீழ்ச்சி மற்றும் முன்கள பணியாளர்கள் அனுபவிக்கும் அதிக வேலை அழுத்த சூழல் ஆகியவை மனநலத்தின் தாக்கம் குறித்த கவலைகளாக எழுப்பப்பட்டுள்ளன",என்று சாகர் கூறினார்.
மன அழுத்தத்திற்கு தீர்வாகுமா?
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (சுகாதார பதிவுகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கல்) மற்றும் இ-சஞ்சீவனி தளம் (தேசிய தொலை ஆலோசனை சேவை) ஆகியவற்றின் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்படும் பிற உடல்நலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் சேவைகளுடன் டெலி-மெண்டல் ஹெல்த் சேவைகளை இணைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் வசதி, கடுமையான உளவியல் நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு உடனடி மனநலப் பாதுகாப்பு வழங்கவும், அந்த நபரின் வசதி மற்றும் மனநலப் பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, அருகிலுள்ள சிறப்பு மனநலச் சேவைகளுக்குத் தகுந்த பரிந்துரைகளை வழங்குவதன் மூலம், தொடர்ந்து கவனிப்பை எளிதாக்கவும் உதவும்.
"வளர்ந்து வரும் சமூகத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களும், அதிக நேரம் திரையிடுவதும் முக்கியப் பிரச்சினைகளாக மாறியுள்ளன. பொதுவான மனநலக் கோளாறுகள் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவது இன்று காணப்படும் ஒரு போக்கு (PTSD, பதட்டம், மனச்சோர்வு, தற்கொலை, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பிந்தைய கோவிட் நோய்க்குறி) லாக்டவுன், சுய-தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றின் காரணமாக தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் மூலம் அதிக மன அழுத்தம் மன ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும்," என்று பிடிஐ மேற்கோள் காட்டியது. கவனிப்பைத் தேடுவதற்கான மக்களின் முடிவுகளில் சாதகமான தாக்கம், மனநலப் பாதுகாப்புக்கான வளங்களை ஒதுக்கும்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது," என்று அவர் கூறினார்.