பெண்கள் உள்ளாடை அணிந்திருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும்போது வழக்கு பதிவு செய்யலாம் என மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்திருக்கிறது. 


கடந்த 2006-ம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டபோது வலி உணரவில்லை என தெரிவித்திருந்தார். ஆனால், உள்ளாடை அணிந்திருந்தபோதும் குற்றம்சாட்டப்பட்டவர் தனது பிறப்பு உறுப்பின்மீது தேய்தார் என தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், சிறுமியின் பிறப்பு உறுப்பு சிவப்பு நிறத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால், அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.




மேலும் படிக்க: Madurai IG Asra Garg: 10 ஆண்டுகளுக்கு முன் போலீஸ் வரலாற்றில் யாரும் செய்யாத புரட்சி... அதே மதுரைக்கு ஐஜி.,யாக வரும் அஸ்ரா கார்க்!




பல ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 


இந்நிலையில் இந்த வழக்கில், உள்ளாடையை கழற்றாமல் ‘பாலியல் வன்கொடுமை’ செய்யப்பட்டார் என எப்படி முடிவு செய்வது என குற்றம்சாட்டப்பட்டாவர் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து இன்று தீர்ப்பு தெரிவித்திருக்கும் மேகாலையா உயர்நீதிமன்ற நீதிபதிகள், சம்பவம் நடந்தபோது அந்த சிறுமிக்கு வலி இல்லையென்றாலும், உள்ளாடை கழற்றப்படாமல் இருந்திருந்தாலும், அவரது பிறப்பு உறுப்பின்மீது ஆணின் பிறப்பு உறுப்பை வைத்து தேய்த்தது சட்டப்படி குற்றம் என தெரிவித்திருக்கிறது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 375(பி)-ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இந்த தீர்ப்பு பலரது வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு இது போன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண