செடி வளர மண் அவசியம் என்பதைதான் நாம் அறிந்திருப்போம். ஆனால், பல்வேறு ஆராய்ச்சிகளும், தொழில்நுட்பங்களும் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிட்டது. அதில் ஒன்று மண் இல்லாமல் செடி, கொடிகள் வளர்ப்பது. நாம் மனி பிளாண்ட் செடியை கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் போட்டு வைத்து வளர்க்க பழக்கியிருப்போம். இல்லையா. ஆனால், மண் இல்லாமல் ஒரு தோட்டத்தையே உருவாக்கியிருக்கிறார் பாட்வை சேந்த விவசாயி ஒருவர். 


அதாவது, தண்ணீரை மட்டுமே கொண்டு செடிகளை வளர்த்து வருகிறார். இந்த தொழில்நுட்பத்திற்கு பெயர் ”ஹைட்ரோஃபோனிக்” (hydroponic). இந்த முறையில் தண்ணீரில் செடிகளை வளர்க்கலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள். 









பாட்னாவின் ஹைட்ரோஃபோனிக்ஸ் தோட்டக்கலை விவசாயி:


பாட்னாவில் கங்கர்பங் காலணியில் வசிப்பவர் முகமது ஜாவத் (Mohammad Javed). இவர் பல காலமாக ஹைட்ரோஃபோனிக் முறையில் செடிகளை வளர்த்து வருகிறார். இதில் தண்ணீரில் உள்ள மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டு ஆரோக்கிமுடன் வளர்கின்றன. தண்ணீரை கொண்டு செடிகளை வளர்ப்பதற்கு 'aquaculture ' என்ற பெருயரும் உண்டு.


இதுகுறித்து ஜாவத் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஸ்ரீ கிருஷ்ண விஜயன் கேந்தாவில் பணிபுரிந்து வந்தேன். எனக்கு ஹைட்ரோஃபோனிக் முறையில் செடி வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக வேலையை விட்டுவிட்டு இதுகுறித்து ஆராய்ச்சிகளில் ஈடுப்பட தொடங்கினேன்.” என்றார். 


தற்போது, ஜாவத் Biofort M என்ற  உரத்தை  மேம்படுத்தினார்.


Biofort M:


பயோஃபோர்ட் M என்பது ஒருவகையான ஊட்டச்சத்து மருந்து. இதை செடிகளில் ஊற்றினால் ஹைட்ரோஃபோனிக் தொழில்நுட்பத்திற்கு பெரிதும் உதவும். இந்த Biofort M ஐ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றினால் அவை ஆரோக்கியமுடன் வளரும்.