”நேருவின் இந்தியா” குறித்து சிங்கப்பூர் பிரதமரின் கருத்துகளையும், இந்திய எம்பிக்கள் குறித்து பேசியதையும் இந்தியா கடுமையாக சாடியுள்ளது. சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கள் தேவையற்றவை என்றும்,  வெளியுறவு அமைச்சகம் சிங்கப்பூர் தூதரை அழைத்து தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதருக்கு சம்மனும் அனுப்பியுள்ளது.


 






 






ஜனநாயகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஆவேச விவாதத்தின் போது பிரதமர் லீ சியென் லூங் இந்தக் கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. “மக்களவையில் உள்ள கிட்டத்தட்ட பாதி எம்.பி.க்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் உட்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் பல அரசியல் ரீதியாக உள்ளன என்றும் கூறப்படுகிறது” என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியென் லூங் பேசினார்.


இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு உட்பட பல்வேறு உலகத் தலைவர்களைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர்.  “விஷயங்கள் உணர்ச்சித் தீவிரத்துடன் தொடங்குகின்றன. சுதந்திரத்திற்காகப் போராடி வென்ற தலைவர்கள் பெரும்பாலும் மிகுந்த தைரியம், அபரிமிதமான கலாச்சாரம் மற்றும் சிறந்த திறன் கொண்ட விதிவிலக்கான தனிநபர்கள். அவர்கள் நெருப்பின் பிறை வழியாக வந்து மனிதர்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்கள் டேவிட் பென்-குரியன்கள், ஜவஹர்லால் நேருக்கள் ஆவர்” என்றும் கூறினார்


மேலும், “மகத்தான தனிப்பட்ட கௌரவத்தால் ஈர்க்கப்பட்டு. அவர்கள் ஒரு துணிச்சலான புதிய உலகத்தை உருவாக்குவதற்கும், தங்கள் மக்களுக்கும், தங்கள் நாடுகளுக்கும் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தங்கள் மக்களின் அதிக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறார்கள். ஆனால் அந்த ஆரம்ப ஆர்வத்தைத் தாண்டி, அடுத்தடுத்த தலைமுறைகள் அடிக்கடி இந்த வேகத்தைத் தக்கவைத்து ஓட்டுவது கடினம்” என்றும் பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண