திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொலவடை உண்டு. வாழ்க்கையின் இரண்டாம் பாதிக்கான வாழ்க்கைத்துணை என்பது எத்தனை முக்கியமானது என்பதை குறிப்பிடும் விதமாக சொல்லப்படுவது அது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் திருமணங்கள் மேட்ரிமோனியல் இணையதளப்பக்கங்களில் தீர்மானிக்கப்படுகின்றன. வகைவகையான மேட்ரிமோனியல் சைட்கள் கொட்டிக்கிடக்கின்றன. சமூகங்கள், மதம், சாதகம் என மக்கள் இன்றுவரை நாடும் பார்வையிலேயே மேட்ரிமோனியல் இணையப்பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

Continues below advertisement


இணையதளத்தில் மணமகன், மணமகள் ஆகியோர் தங்களின் சுய விவரங்களை பதிவிட்டால் அவர்களுக்கு தேவையான வரன்களை தேடி பிடித்துக்கொள்ளலாம். இப்படி டிஜிட்டல் ஒருபக்கம் இயங்கினாலும் தினசரி நாளிதழ்களிலும் வரன் தேடும் படலங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் வரன் தேடும் பெண் ஒருவர் பேப்பரில் கொடுத்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த விளம்பரத்தில் 'பணக்கார தொழிலதிப குடும்பத்தைச் சேர்ந்த 24 வயதான அழகான பெண் ஒருவருக்கு மாப்பிள்ளை வேண்டும். 


அதே சமூகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ், ஐஏஎஸ், டாக்டர், பிஸினஸ்மேன் ஆகியோர் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. இது வழக்கமானதுதான். அதற்கு கீழே 'ஐடி எஞ்சினியர்ஸ் தொடர்பு கொள்ள வேண்டாம்' என குறிப்பிட்டு எழுதியுள்ளனர். இது இணையத்தில் வேகமாக பரவியது. இதென்ன ஐடி மாப்பிள்ளைக்கு வந்த சோதனை என பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்