Watch Video: கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்த தீ - பல அடி உயரத்திற்கு கரும்புகை - பொதுமக்கள் பதற்றம்

Watch Video: உத்தரபிரதேச மாநிலம் சாஹிபாபாத்தில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Continues below advertisement

Watch Video: சாஹிபாபாத் தொழிற்சாலை தீ விபத்தால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்ததால் பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.

Continues below advertisement

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து:

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள சாஹிபாபாத் தளம் 4 இண்டஸ்ட்ரி பகுதியில் உள்ள,  தொழிற்சாலை ஒன்றில் அதிகாலை நேரத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆலை முழுவதும் பயங்கர சத்தத்துடன் கொழுந்து விட்டு எரிந்த தீயால், பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.  தகவல் அறிந்து 18 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டுக்கடங்காமல் எரிந்த தீயால் கடும் அனல் வீசியதால், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவித்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இருப்பினும் விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Continues below advertisement