தமிழ்நாடு:
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடுகிறார்.
- தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
- நீலகிரிக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org-ல் விண்ணப்ப பதிவு தொடக்கம்.
- வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - ஆட்சியர்.
- இ-பாஸ் குழப்பத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.
- டிடிவி தினகரன் ஆணவத்தின் உச்சத்தில் பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு.
- தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ராட்சத அலை எழும் - கடல்சார் ஆய்வு மையம்.
- கன்னியாகுமரி: பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் அலை சீற்றத்தால் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.
- தமிழ்நாட்டில் வெப்ப அலை எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக்கால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளில் உயிரிழப்பு.
- கடல் அலை சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கோயில் கடலில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவரின் வாகன ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா:
- 3ம் கட்ட மக்களவை தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு.
- இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- தேர்தலில் பாஜக 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் குற்றச்சாட்டு.
- கர்நாடக மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றிபெற்றும் - முதலமைச்சர் சித்தராமையா.
- ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதான கல்வீச்சு: டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி பணியிட மாற்றம்.
- ஆபாச வீடியோ வழக்கில் தேவகவுடா பேரன் பிரஜ்வாலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.
- கேரளக்கடலில் எழுந்த ராட்சத அலைகளால் கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதம் - அரசு.
- மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை இடைநீக்கம் செய்தது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்.
- மும்பை கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் - தேசிய கடலாய்வு, வானிலை ஆய்வு நிறுவனம்.
- பாலியல், ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல்.
உலகம்:
- இஸ்ரேலில் உள்ள அல்ஜசீரா டிவி நிறுவன அலுவலகங்களை மூட அமைச்சரவை தீர்மானம்.
- அமெரிக்காவில் 17 பேரை ஊழி போட்டு கொன்ற நர்சுக்கு 760 ஆண்டு சிறை தண்டனை.
- காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது.
- உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளது ரஷ்யா.
- பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் உயிரிழப்பு.
- இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 15 பேர் உயிரிழப்பு, 115 பேர் மீட்பு.
- தென்கொரியாவின் தெற்கில் உள்ள ஜேஜூ தீவில் மோசமான வானிலையால் 40 விமானங்கள் ரத்து.
- வர்த்தக உறவை துருக்கி நிறுத்தி வைத்ததற்கு பதிலடி நடவடிக்கைகளை அறிவித்தது இஸ்ரேல்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை அழித்தது ரஷ்யா
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி.
- ஐபிஎல் 2024: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சென்னை அணி.
- இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன.