டெல்லி அரசு சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக தனது அமைச்சரவை சகாவின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியிருக்கிறது என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குற்றம்சாட்டியுள்ளார். முன்பே சிபிஐ ரெய்டுகள் நடந்ததாகவும், அப்போது போலவே இந்த முறையும் எதுவும் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.


 






டெல்லி கலால் கொள்கை 2021-22 தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ இன்று சோதனை நடத்தியது.


இதுகுறித்து கெஜ்ரிவால் ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் கல்வி மாதிரி பாராட்டப்பட்டு, அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாளான தி நியூயார்க் டைம்ஸின் முதல் பக்கத்தில் மணீஷ் சிசோடியாவின் புகைப்படம் வெளியான அதே நாளில், மத்திய அரசு மணீஷின் வீட்டிற்கு சிபிஐ அனுப்பியுள்ளது.


 






சிபிஐ-யை வரவேற்கிறோம். முழு ஒத்துழைப்பு அளிப்போம். இதற்கு முன்பும் சோதனை மற்றும் விசாரணை நடந்தது. எதுவும் வெளிவரவில்லை. இப்போதும் எதுவும் வெளியே வராது" என பதிவிட்டுள்ளார்.


கடந்த மாதம் டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, கலால் கொள்கை 2021-22 அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இந்த விவகாரத்தில் 11 கலால் துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


மணீஷ் சிசோடியாவும், கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து மணீஷ் ட்விட்டர் பக்கத்தில், "சிபிஐ வந்துவிட்டது. அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


நாங்கள் நேர்மையானவர்கள். லட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறோம். நல்ல வேலையில் ஈடுபடுபவர்கள் இப்படி துன்புறுத்தப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. அதனால்தான் நம் நாடு உலக அளவில் முதலிடம் பெறவில்லை" என பதிவிட்டுள்ளார்.


சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர், தன் மீது பல வழக்குகள் பதியப்பட்டதாகவும், ஆனால் அதில் எதுவும் வெளிவரவில்லை என்றும், இந்த முறையும் எதுவும் வெளியே வராது என்றும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண