Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh Resignation: மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். மணிப்பூரில் குக்கி-மெய்தி சமூகத்திடையே மோதல் பிரச்னை, 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் இன்று கொடுத்துள்ளார்.
இந்நிலையில், குக்கி - மெய்தி சமூக பிரச்னையை சரியாக கையாளதது; கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தது என பிரேன் சிங் மீது பாஜக தலைமை கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமன்றி பாஜகவின் 7 எம்.எல்-க்களும் பிரேன் சிங்கிற்கு எதிராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று மணிப்பூர் ஆளுநரை சந்தித்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுத்துள்ளார்.
பிரேன்சிங் மீது அதிருப்தி:
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் கலவ்ரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது, இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து பெரிதும் பேசாமல் இருக்கிறார். இன கலவரத்தை தடுக்க முயற்சி செய்யாமல் இருக்கிறார் . அங்கு இருக்கும் பெண்கள் மிகுந்த கொடுமைகளுக்கும், ஆளாவதை கண்டு கொள்ளாமல், பாஜக அரசு இருக்கின்றது என காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, பாஜக கூட்டணியில் இருந்தும் , தங்களது எம்.எல்.ஏக்களை பிரேன் சிங்கின் பாஜக அரசு இழுத்துக் கொண்டது என மணிப்பூர் ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது . இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, பிரேன் சிங்கிற்கு அளித்த ஆதரவை மணிப்பூர் ஐக்கிய ஜனதா தளம், திரும்ப பெற்றது. மேலும், மத்தியில் பாஜக ஆட்சி அமைய உதவி செய்த நிதிஷ்குமார், பாஜக அரசுக்கு மறைமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், பிரேன் சிங் நடவடிக்கைக்கள் காரணமாக, 7 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது
நம்பிக்கையிலா தீர்மானம்.
இந்நிலையில், நாளை மணிப்பூர் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த தருணத்தில், பட்ஜெட் கூட்டத் தொடரில் மணிப்பூர் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த தருணத்தில், பாஜகவின் வடகிழக்கு பொறுப்பாளரான சம்பித் பத்ராவை மணிப்பூர் சென்று, நிலவரம் குறித்து தெரிவிக்குமாறு, பாஜக தலைமை உத்தரவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நிலவரம் குறித்து மணிப்பூர் சென்றுவிட்டு, நேற்றைய தினம் சம்பித் பத்ரா டெல்லி சென்றார். அவர் , பிரேந்திர சிங்கிற்கு எதிராக அறிக்கை கொடுத்ததாகவும் கூறபப்டுகிறது. இதையடுத்து, ஆட்சியை காப்பாற்ற வேண்டும் என்று, பிரேன் சிங்கை ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை அழுத்தம் கொடுத்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
பிரேன் சிங் ராஜினாமா:
இந்நிலையில்தான், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில், மாநிலத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சிங் ராஜினாமா செய்துள்ளார். மேலும் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்னதாகவே புதிய முதலமைச்சரை பாஜக தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களையும், கூட்டணி கட்சியினரையும் சமாதனம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆதரவு வாபஸ்:
கடந்த நவம்பரில் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (NPP) பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து, பெரும்பான்மையான மெய்தி மற்றும் பழங்குடி குக்கி குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்களை சந்தித்து வரும் மணிப்பூர் மாநிலம், அரசியல் உறுதியற்ற தன்மையையும் கண்டது.
பெரும்பான்மையான மெய்திகள் மற்றும் பழங்குடி குக்கி குழுக்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் நீடித்த வந்த நிலையில், கடந்த நவம்பரில் தேசிய மக்கள் கட்சி (NPP) பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றது, மேலும், நிதிஷ்குமார் JDU எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜக கட்சியில் சேர்ந்தனர். ஒருவர் மட்டும் JDUவில் இருந்த நிலையில், அவரும் சில நாட்களுக்கு முன்பு, ஆதரவு கொடுக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தருணத்தில் , பாஜகவில் உள்ள 7 எம்.எல்.ஏக்களும் பிரேன் சிங் மீது அதிருப்தியில் இருந்ததாகவும் சர்ச்சை வெடித்தது.
ஆட்சி தப்புமா?
மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 32 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்றாலும் பெரும்பான்மை இருக்கும் நிலையில், சிலர் மாறிவிட்டால் என்ன செய்வது என்பதாக பாஜக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதன் முதல் முடிவுதான் முதல்வர் மாற்றம் என கூறப்படுகிறது. இதனால், எதிர்ப்புகள் சற்று குறையம் என திட்டமிட்டுள்ளது, பாஜக தலைமை
இந்நிலையில், மணிப்பூரின் அடுத்த முதலமைச்சர் யார்?, நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வருமா? கொண்டு வந்தால் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்குமா? என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.
Also Read: சத்தீஸ்கரில் பயங்கரம்! 31 நக்சலைட்டுகள் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை: நடந்தது என்ன?