சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 31 நக்சலட்டுகள் கொல்லப்பட்டிருக்கின்ற சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும்,மாவோயிஸ்ட்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ரகசிய தகவல்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு உட்பட்ட காடுகளில் நக்சலைட்டுகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்குன் ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், அப்போது என்கவுன்டர் நடத்தியதாக பஸ்தர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், துப்பாக்கிச் சண்டையின் போது இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், இரண்டு காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து காயம் அடைந்தவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் பஸ்தர் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

Also Read: Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?

”68 பொதுமக்கள் கொலை”

நக்சலைட்டுகள் சம்பந்தப்பட்ட மற்றொரு சம்பவத்தில், சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.

அரன்பூர் கிராமத்தில் உள்ள சர்பஞ்ச் ஜோகா பார்சே (52) என்பவரின் வீட்டை அடையாளம் தெரியாத சிலர் தாக்கி, அவரது குடும்பத்தினர் முன்னிலையிலேயே கோடரியால் வெட்டிக் கொன்றனர். இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு நடந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

அரன்பூர் காவல் நிலையக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் நக்சலைட்டுகள் செய்ததாக தெரிகிறது,” என்றார்.

பிப்ரவரி 17, 20, 23 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலில், சர்பஞ்ச் பதவிக்கு பார்ஸ் போட்டியிட்டார். கடந்த காலங்களில் சர்பஞ்சாக பணியாற்றிய அவர், மீண்டும் அதே பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டார். 

பிப்ரவரி 4 அன்று அதே அரன்பூர் பகுதியில் மற்றொரு நபர் நக்சலைட்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அதற்கு முன் ஒரு பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களால் இருவர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் முன்னாள் சக ஊழியர்களில் ஒருவரும் அடங்குவர்.

கடந்த மாதம், பிஜப்பூரில் உள்ள பைரம்கர் பகுதியில் 41 வயதுடைய நபரை நக்சலைட்டுகள் படுகொலை செய்தனர்.  2024 ஆம் ஆண்டில் பிஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிராந்தியத்தில் நக்சல் வன்முறையின் வெவ்வேறு சம்பவங்களில் குறைந்தது 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையை மேற்கோள்காட்டி PTI செய்தி முகமை தெரிவித்து உள்ளது .

Also Read: அடுத்த ஷாக்! மேலும் 480 இந்தியர்களை அனுப்பும் அமெரிக்கா! எப்போது, மோடி அமெரிக்க போகிறார்?