தனியாக இரயிலில் தன் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என இரயில்வே அமைச்சருக்கு டிவீட் செய்த தந்தை. அடுத்த 34 நிமிடங்களில் மகனிடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது. ரயில்வே துறையின் செயலால் மனம் நெகிழ்ந்த தந்தை கிஷன் ராவ்.


மங்களூரு-கேரள ரயிலில் சாந்தனு தனியாக வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். ஒன்பது மணி நேர பயணத்தில், மகனை தொடர்பு கொண்டுள்ளார் தந்தை. ஆனால், மகனில் ஃபோன் ஸ்விட் ஆஃப் ஆகி இருந்துள்ளது. ஐந்து மணி நேரமாக மகனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை என்று தந்தைக்கு பதற்றம் அதிகமாகியது.






சிறுவனின் தந்தை கிஷன் ராவ் ,உடனடியாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தனது மகனின் இருப்பிடத்தை அறிய உதவி கோரி ட்வீட் செய்தார். சரியாக 34 நிமிடங்களில், அவரது மகன் சாந்தனு, எல்லாம் நன்றாக இருக்கிறது என்று அப்பாவை ஃபோனில் தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார்.


ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பொது மேலாளரான கிஷன் ராவ் இதுகுறித்து கூறுகையில், என் மகன் சாந்தனு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும் கேரளாவில் கோட்டயம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றான். அதிகாலை 5 மணியளவில் மங்களூரு சென்ட்ரல் ஸ்டேஷனில்  பரசுராம் எக்ஸ்பிரஸில் அவனைத் தனியாக அனுப்பினோம். மதியம் 2.30 மணியளவில் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் இடையே உள்ள பைரவம் சாலை ரயில் நிலையத்தில் சாந்தனுவை அவனுடைய சகோதரர்கள் வந்து அழைத்துச் செல்வதாக திட்டம் இருந்தது. காலை 10 மணியளவில், நான் சாந்தனுவைப் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன். அவனது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதையும், அவனைத் தொடர்பு கொள்ள வழியில்லாததை அடுத்து அதிர்ச்சியடைந்தேன். நான் சிறிது நேரம் காத்திருந்தேன்.பின்னர், இரயில்வே அமைச்சருக்கு காலை 10.34 மணிக்கு ட்வீட் செய்தேன்.” என்றார்.


கிஷன் ராவ், அவருடைய மனைவி சந்தியாயும் மகன் உடன் பயணம் செய்தாதால், மகனுக்கு மொபைல் போன் கொடுத்துள்ளனர்.ஆனால், மகனின் ஃபோன் ஸ்விட் ஆஃப் என்று வரவே பெற்றோர்கள் பதறி உள்ளனர். ஆனால், தந்தை இரயில்வே அமைச்சரை தொடர்பு கொள்ள எடுத்த முடிவு இக்கட்டான சூழலில் பெரும் உதவியாக இருந்திருக்கிறது.


Watch Video: சபர்மதி ஆசிரம விசிட்.. ராட்டை சுற்றிய இங்கிலாந்து பிரதமர்..வைரலாகும் போரிஸ் ஜான்சன் வீடியோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண