Shocking Video : மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பள்ளிக்குள் நுழைந்த நபர்
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் முர்சியா அஞ்சல் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஒரு வகுப்பறையில் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 80 பேர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் 44 வயதுடைய மர்ம நபர் ஒரு வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார். மேலும், துப்பாக்கியை காட்டி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்கள் இருக்கும் வகுப்பறைக்குள் நுழைந்த நபரை சாதுரியமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் பற்றி மாவட்ட எஸ்.பி கூறுகையில், "மால்டா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கையில் துப்பாக்கியுடன் 7ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவர் 44 வயதுடைய டெப் குமார் பல்லவ் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் பள்ளியில் நுழைந்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும், இவர் கையில் கத்தி, 2 பாட்டில் திரவம், துப்பாக்கி ஆகியவை வைத்திருந்தார். இவர் வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், பள்ளி வகுப்பறையில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
காரணம்
இதனை அடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மகனும், மனைவியும் சுமார் ஒரு ஆண்டாக காணாமல் போனதால் இதுபோன்று நடந்துகொண்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "இந்த சம்பவம் திட்டமிட்ட சதி. மாணவர்களை பத்திரமாக மீட்ட போலீசார் எனது பாராட்டுகள்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க
Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!