அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் திருமண ஊர்வலங்களில் தேர்பவனிகளை மேற்கொள்ளமுடியாது. இந்நிலையில் மக்களின் கனவை நினைவாக்கும் விதமாக தனது நானோ காரை ஹெலிகாப்டர் வடிவில் மாற்றி திருமண ஊர்வலங்களுக்குப் பயன்படுத்திவருகிறார் பீகாரைச்சேர்ந்த  இளைஞர் ஒருவர்.


இன்றைய காலக்கட்டத்தில் திருமணங்கள் அனைத்தும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. குறிப்பாக குதிரை வண்டி, தேர், விலையுயர்ந்த கார்கள், குதிரை போன்றவற்றில் மணமகன் மற்றும் மணமகளை அமரவைத்து ஊர்வலமாய் அழைத்துவருகின்றனர். ஆனால் இதனை அனைத்து தரப்பட்ட மக்களும் மேற்கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறிதான். ஆனால் இதுப்போன்று தங்களது திருமணமும் நடைபெற வேண்டும் என்று ஆசையில் உள்ளவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது ஹெலிகாப்டர் பவனி டிரெண்டாகிவருகிறது. கார்லய போகமுடியல. அது என்ன ஹெலிகாப்டர்னு கேட்கிறீங்களா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.





பீகார் மாநிலம் மேற்கு சாப்ரான் மாவட்டம் பாகஹா பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவர், அனைவரும் திருமணத்தின் போது வித்தியாசமாக ஊர்வலங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, ஒரு நானோ காரை ஹெலிகாப்டர் போல வடிவமைத்துள்ளார். இதோடு இந்த காரை திருமண ஊர்வலங்களுக்கு எடுத்துச்செல்லவும் திட்டமிட்டுள்ளது.


இந்த காரை ஹெலிகாப்டர் தோற்றத்தில் மாற்றுவதற்காகவும், இதற்கு ஹைடைக் வடிவம் கொடுக்கவும் தற்போது ரூபாய் 2 லட்சம் வரை செலவாகியுள்ளதாம். இந்த ஹெலிகாப்டர் பறக்காது என்றாலும், வித்தியாசமாக தோற்றமளிக்கும். இதோடு இந்த காரிலன் மேலே மற்றும் பின்னால் உள்ள பிளேடுகள் அனைத்தும் ஹெலிகாப்டரில் சுற்றுவது போல அமைத்திருக்கும் படி இதனை வடிவமைத்தவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த நானோ ஹெலிகாப்டர் காரை இதுவரை 20க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரூ.15 ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறது.




இவர் மட்டுமில்லை, ஏற்கனவே பீகாரில் உள்ள சாப்ராவைச்சேர்ந்த மிதிலேஷ், தனது சிறு வயது கனவை நினைவாக்கும் விதமாக டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றியுள்ளார். இதனை முழுவதும் முடிக்க 7 மாதங்கள் ஆகியுள்ளது. பிரசாத் அதன் ரோட்டர்கள் மற்றும் பக்க பேனல்களில் வண்ணமயமான LED விளக்குகளையும் பொருத்தியுள்ளார் இதற்காக  ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்தார். இந்தியாவைப் போலவே, சில ஜுகாடு மற்ற நாடுகளிலும் உள்ளது. பிரேசிலைச் சேர்ந்த ஒருவர், உண்மையில் பறக்கும் ஹெலிகாப்டரை உருவாக்க ஸ்கிராப் செய்யப்பட்ட கார்களின் பாகங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இதோப்போன்று மகாராஷ்டிராவைச்சேர்ந்த ஒருவர் பழைய உலோகத்தைப்பயன்படுத்தி 4 சக்கர ஜூப்பை உருவாக்கியது அனைவரையும் கவர்ந்திருந்தது.