யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு (நெட்) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. தேசியத் தேர்வுகள் முகமை நடத்திய தேர்வின் முடிவுகளை கீழ்க்காணும் இணைப்பை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம்நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டது.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதையடுத்து நெட் தேர்வுகள் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் நெட் தேர்வு நடைபெற்றது. 




இந்நிலையில், யுஜிசி தேசியத் தகுதித் தேர்வு (நெட்) தேர்வு முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை இன்று (பிப்.19) வெளியிட்டுள்ளது.


தேர்வர்கள், https://testservices.nic.in/resultservices/UGCNet-auth-2021 என்ற இணையதளப் பக்கத்தில் சென்று, தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அதில் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு எண்கள் ஆகியவற்றைப் பதிவிட்டு, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


*


இதையும் வாசிக்கலாம்:


Question Paper Leakage | தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்... தேர்வுத்துறை அலட்சியமா? பள்ளிகளில் முறைகேடா? காரணம் என்ன?


TNPSC group 2 Exam Pattern: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு: மொத்த பணியிடங்கள் விவரம்..!


TN TRB Exam Restrictions | டிஆர்பி தேர்வில் பெல்ட், நகை, ஹை-ஹீல்ஸ் அணிய தடை.. இன்னொரு சர்ச்சை..


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண