சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும் வீடியோ வேகமாக வைரலாகிவிடும். அதற்கு மாறாக தற்போது விலங்கு ஒன்று திருமண வரவேற்பு நடைபெறும் பகுதிக்கு வந்துள்ள வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கன்கேர் என்ற பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக அங்கு வெகு விமரிசையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் திருமணத்திற்கு அழைக்கப்படாத விருந்தாளியாக கரடி ஒன்று தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த திருமண வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் ரசித்து பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த திருமண வரவேற்பு முடிந்த பிறகு இந்த கரடிக்குட்டிகள் அப்பகுதிக்குள் வந்ததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அங்கு இருந்த சில நபர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:6 மூட்டை உண்டியல் சேமிப்பு சில்லறைகளைக் கொடுத்து, பைக் வாங்கிய நபர்.. அசந்துபோன ஷோ ரூம் ஊழியர்கள்..