ஹைதாராபாத்தில் நேரு விலங்கியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில், பூங்காவிற்கு வந்த குமார் என்பவர்,  அங்கிருக்கும் ஆப்பிரிக்க சிங்கத்தின் குகையின் மேலே உட்கார்ந்து கொண்டு, சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்றார்.


இவரை பார்த்த சிங்கம் அவர் கீழே குதிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தது. ஆனால் குமார் சிங்கம் அங்கிருந்து செல்லும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். இதனையடுத்து இது குறித்து அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் 31 வயதான குமாரை பிடித்து பகதூர்புரா காவலர்களிடம் ஒப்படைத்தனர். 


இது குறித்து பகதூர்புரா காவல்துறையினர் கூறும் போது, “ சிங்கத்தின் கூண்டிற்குள் குதிக்க முயன்றவரின் பெயர் சாய் குமார்.  அவர் சிங்கத்தின் கூண்டிற்குள் வைரங்கள் இருக்கும் என நம்பி, அதனை எடுக்க அங்கு குதிக்க முயன்றதாக கூறினார். அவருக்கு மனநல பிரச்னை இருந்தது. அவரின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தோம்.” என்றார் 


மேலும் விசாராணையில், அவர் நெடுநாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்ததும், 17 வருடங்களாக பல இடங்களில் சுற்றி வந்ததும் தெரிய வந்தது. 



மேலும் செய்திகளைப் படிக்க...