சமீப காலமாக பிரபல வேலை தேடும் தளமான லிங்க்ட் இன் -  இல் பல சுவாரஸ்யமான பதிவுகளை பார்க்க முடிகிறது  சிலர் தங்கள் வாழ்க்கை மேம்பட்ட விதம் குறித்த சுவாரஸ்ய தொகுப்பினை பகிர்வார்கள் , சிலர் நூதனமாக வேலை தேட முயற்சிப்பார்கள் , சிலர் பரிதாபமாக தங்கள் நிலையை வெளிப்படுத்துவார்கள் . இப்படியான சூழலில் மதுர் சிங் என்னும் இளைஞர் தான் புதிதாக கார் வாங்கியிருக்கும் செய்தியை  LinkedIn இல் பகிர்ந்திருக்கிறார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றுதானே கேட்கிறீர்கள் , கார் வாங்கியவர் தனது முன்னாள் காதலி , முன்னாள் மனைவி , முன்னாள் முதலாளி என அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். உண்மையில் அவர் சீரியஸாக இந்த பதிவை ஷேர் செய்தாரா அல்லது விளையாட்டிற்காக கிண்டல் பாணியில் பதிவிட்டிருக்கிறாரா என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.







மதுர் சிங் தனது பதிவில் கூறியது :


”நான் டாடா டியாகோவை வாங்கியிருப்பதை  மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன்.  இதற்காக நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை. தவணையும் இல்லை. முழு தொகையை செலுத்தி வாங்கியிருக்கிறேன். கார் வாங்குவதற்காக பல வருடங்களாக பணத்தைச் சேமித்தேன். நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் செல்லவில்லை. என் காதலி அல்லது மனைவிக்கு விலையுயர்ந்த பரிசுகளையும் வாங்கவில்லை. என் அம்மா என்னை சப்ஜி வாங்க அனுப்பினால், நான் சப்ஜி வாலாவிடம் தானிய மிர்ச்சை இலவசமாகக் கொடுப்பேன், அதனால் எனது காருக்கு அந்த ₹10 சேமிக்க முடியும். நான் இரவில் கூடுதல் ஷிப்ட்களில் காவலாளியாக வேலை செய்தேன். சில நேரங்களில் மெக்டொனால்ட்ஸில் வேலை செய்தேன், சில சமயங்களில் PSC விண்ணப்பதாரர்களுக்கு டியூஷன் எடுத்தேன். இறுதியாக  என் காத்திருப்பு முடிந்தது. கடின உழைப்பால் சேர்க்கப்பட்ட பணத்திற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது. எனது பெற்றோர்கள், எனது முன்னாள் முதலாளிகள், முன்னாள் மற்றும் தற்போதைய தோழிகள் மற்றும் கடைசியாக அந்த சப்ஜி வாலாக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். ”என எழுதியிருக்கிறார்.







நெட்டிசன்கள் கருத்து :


இந்த பதிவிற்கு கிழே ஒருவர் “எனது கேள்வி, நீங்கள் முன்னாள் காதலி & மனைவியைக் குறிப்பிட்டு மீண்டும் முன்னாள் மற்றும் தற்போதைய காதலியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெண்களுக்கு லிங்க்ட்இன் அணுகல் இல்லையா? பெரிய டிராமா நடக்கும்னு நினைக்கிறேன் “ என்றார். மற்றொருவர் மனைவிக்கும் காதலிக்கும் ஒருவரையொருவர் பற்றி தெரியுமா? என தெரிவித்துள்ளார். மேலும் பலர் இது கிண்டலுக்காக போட்ட பதிவு , சீரியஸாக இப்படி யாரும் எழுத மாட்டார்கள் என்கின்றனர்.