இரண்டு மாடுகள் ஒன்றையொன்று மோதிக் கொண்டு கடையின் வெளிப்புறத்தில் அடித்து நொறுக்கும் காட்சிகளும், அப்போது இரு பெண்கள் சிக்கி கொண்ட காட்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மோதிக் கொண்ட மாடுகள்:
புதுடெல்லியில், ஒரு தெருவில் இரண்டு மாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது. பல சிறுமிகள் காயமடைந்ததைக் காட்டுகிறது. சிசிடிவி காட்சிகளில் மூன்று பெண்கள், கடையில் தின்பண்டங்களை சாப்பிடும் சாதாரண காட்சி இருக்கிறது. அப்போது, இரண்டு மாடுகள் ஒன்றையொன்று மோதிக்கொள்கின்றன. மாடுகள் கடையின் வெளிப்புறத்தில் அடித்து நொறுக்கும் தருணம் ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கிறது. மாடுகள் மோதும் போது நாற்காலிகளும் பலகைகளும் பறந்து செல்கின்றன.
சிக்கி கொண்ட சிறுமிகள்:
அங்கிருந்த சிறுமிகள் பயத்தில் சிதறி ஓடினர். ஒரு பெண் மாடு ஒன்றின் கீழ் மாட்டிக் கொண்டார். அப்போது சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒரு நபர் மீட்பு முயற்சியில் இறங்கி, அந்த சிறுமியை காப்பாற்றினார். இந்த வீடியோ இந்தியாவில் அதிகரித்து வரும் தெரு மாடுகளின் அச்சுறுத்தலைப் பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. பல பயனர்கள் வலுவான கருத்துக்களைக் கூறியுள்ளனர். மாடுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கடுமையான அரசாங்க விதிமுறைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
உதவியருக்கு குவியும் பாராட்டுகள்:
இந்த கருத்துக்கள் இந்த விலங்குகளால் ஏற்படும் ஆபத்து மற்றும் பொது இடங்களில் அவை ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு ஒரு சான்று என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் , பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆபத்து இருந்தபோதிலும் சிறுமிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்த நபர்களின் தைரியத்தையும், சரியான நேரத்தில் செய்த உதவியையும் பாராட்டுகின்றன.
மேலும் சிலர் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டனர். அதில் ஒரு பயனர் தெரிவிக்கையில் மஞ்சள் சட்டை அணிந்த நபர் மொபைல் போன்களை எடுக்க சென்றது நகைச்சுவையானது என தெரிவித்தார்., "முதலில் நான் நினைத்தேன் ஒரு மஞ்சள் சட்டை பையன் பெண்களை காப்பாற்ற வந்தான். ஆனால் அது தொலைபேசிதான்!. சகோதரர், அவரது முன்னுரிமைகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார் என ஒரு பயனர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
இச்சம்பவம் இந்தியாவில் , தெருக்களில் உலாவும் மாடுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கவலையை எடுத்துக் காட்டுகிறது.
Also Read: Money Seized: ரூ.9 ஆயிரம் கோடியை நெருங்கும் தேர்தல் பறிமுதல்; எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?