ருத்ராபூரில் டிவிஎஸ் ஜூபிடருக்கு ரூ.50,000 தொகையை 10 ரூபாய் காசுகளில் செலுத்திய நபர் இணையத்தில் வைரல்!
உத்தரகாண்ட் மாநிலம், ருத்ராபூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது ஊரில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் வாங்குவதற்காக, 50,000 ரூபாய்க்கு நாணயங்களை சேகரித்தார். பின் தனது ஊரில் இருக்கும் பைக் கடைக்கு சென்று டிவிஎஸ் ஜுபிடர் வாங்குவதற்கு புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை வாங்குவதற்காக அந்த நாணயங்களை பயன்படுத்தினார். அந்த நபரின் ரூ.50,000 ரூபாயை ரூ.10 நாணயங்களில் ஊழியர்கள் கணக்கிடுவதை வீடியோவாக பதிவிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
TVS இன் ஜூபிடர் ஸ்கூட்டர், Ecothrust Fuel Injection தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்ட 110 cc ஒற்றை சிலிண்டர் மாடலாகும். இது 7.4 குதிரைத்திறன் கொண்டது. ருத்ரபூரை சேர்ந்த அந்த நபர் தன்னிடம் ரூ. 50,000 பணம் இருப்பதாகக் கூறி, ஜூபிடர் அடிப்படை மாடலின் (metal wheels and drum brakes) வாங்க முடிவு செய்துள்ளார். ஆன்-ரோடு விலை ரூ.85,210 என்றும் முன் பணமாக 50,000 செலுத்தியுள்ளார்.மீதி உள்ள பணத்தை அவர் எப்படி செலுத்தினார் என்பது தெரியவில்லை. இது புதிய முயற்சியா என பார்த்தால் நிச்சயம் இல்லை. இது போல் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தான் கடின உழைப்பால் சேர்த்த பணத்தை இரு சக்கர வாகனததை வாங்கும் இவர் முதல் நபராக இருக்க முடியாது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயதான வி.பூபதியும் மார்ச் 2022-இல் ரூ. 2.6 லட்சத்திற்கு நாணயங்கள் கொடுத்து பஜாஜ் டோமினார் 400-ஐ வாங்கினார். ஷோரூமில் அந்த காசை சரிக் பார்க்க சுமார் 10 மணிநேரம் ஆனது.
பூபதி இந்த காசை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வந்துள்ளார். தற்போது, எஸ்.யூ.வி வாங்குபவர்கள் கூட இந்த டிரெண்டை பின்பற்றி வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு நபர் ஒரு புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோவை நாணயங்கள் செலுத்தியதாகக் கூறினார். அவர் வாங்கிய எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.8.99 லட்சம், அவர் வாங்கியது ரூ.12லட்சம். ருத்ராபூரில் நடைபெற்ற சம்பவத்தைப்போல இந்த சம்பவமும் இணையத்தில் பதிவிட்டதால் வைரலானது.
பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில், அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு வித்தியாசமான முறையில் ரூ.22,000 நாணயங்களைக் கொண்ட முன்பணம் செலுத்தி ஸ்கூட்டரை வாங்கினார். இது போன்ற சம்பவங்கள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கத்து.
Virat Kohli: ஒரே போட்டி.. ஓராயிரம் சாதனை..! மொத்த ரெக்கார்டையும் கொத்தாக அள்ளிய "கிங்" கோலி..!
Play Store : ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 16 ஆஃப்ஸ்..! என்ன காரணம் தெரியுமா..?
GP Muthu : செல்ல மகனுடன் எடுத்த செல்ஃபியை பதிவிட்ட ஜி.பி முத்து..லைக்ஸை அள்ளித்தெளிக்கும் ரசிகர்கள்!