டிக்-டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜி.பி முத்து. இவர் செத்த பயலே நாரப் பயலே என அவரது ஊர் பேச்சுவழக்கில் பேசி வெளியிட்ட வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகிக் கொண்டேயிருந்தது. இவரது இயற்கையான பேச்சு பலருக்கும் பிடித்துப் போக, சொந்தமாக யூடியூப் சேனலே ஆரம்பித்துவிட்டார். பல நாட்களாக சமூக வலைதளங்களில் கன்டன்ட் கிடைக்காமல் சுற்றும் மீம் கிரியேட்டர்களுக்கு மீம்ஸ் மெட்டீரியலாகவும் மாறிவிட்டார். இவருக்கு, உலகின் மூலை முடுக்குகளிலிருந்து பலரும் லெட்டர் மற்றும் பரிசுகள் அனுப்புவதும், அதை இவர் அன்பாக்ஸிங் செய்து வீடியோக்களை வெளியிடுவதும் வழக்கம். இப்படி தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி கொண்டிருந்த இவரை, அன்போடு அழைத்துக் கொண்டது பிக்பாஸ் இல்லம்.


இந்நிகழ்ச்சியில் முதல் நாளிலிருந்து தனித்துவத்தோடு விளையாடிவந்த அவர், தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத செய்தியைக் கேட்டவுடன், போட்டியிலிருந்து விலகிவிட்டார்.


தானாக முன்வந்து வாக்-ஓவர் வாங்கிய முத்து:


பிக் பாஸின் 6-ஆவது சீசனில் யார் யார் வரப்போகிறார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக்கிடந்தவர்களுக்கு, அன்பு பரிசாக முதல் ஆளாய் வந்திறங்கினார், நம்ம ஜி பி முத்து. போட்டியில் பங்கேற்ற முதல் நாளிலிருந்து தனது இயல்பான குணாதிசயத்தால் அனைவரையும் கவர்ந்த இவர், கொடுத்த டாஸ்குகள் அனைத்தையும் லெஃப்டில் வாங்கி, ரைட்டில் ஓட விட்டார். இவருடன் சக போட்டியாளர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக சண்டைக்கு நின்றாலும், அவர்களை “என் மக மாதிரிதான்..” என்று கூறி அன்பினால் வென்றார். 


ஜி.பி முத்து நிகழ்ச்சியைவிட்டு வெளியேறுவதாக பிக்பாஸிடம் கூறும் வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் முத்து, நிகழ்ச்சியை விட்டும் வெளியேறினார். ஜி பி முத்துவுக்காக மட்டும் பிக்பாஸ் சீசன் 6-ஐ பலபேர் பார்த்து வந்தனர். பிக்பாஸ் வீட்டுக்கு முதல் ஆளாக வந்த இவர், இப்படி முதல் ஆளாக கிளம்பி விட்டாரே என பலரும் அவரவர் சமூகவலைதள பக்கங்களில் ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.






ஜி பி முத்துவின் லேட்டஸ்ட் போட்டோ:


தனது குடும்பத்தினர் மீது அளவுகடந்த அன்பு கொண்டுள்ளதாக தெரிவித்த ஜி.பி முத்து, தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவலை கேட்டவுடன், “பணம், புகழை விட என் மகன்தான் முக்கியம்.” என்று கூறி பிக்பாஸை விட்டு வெளியேறினார். தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தனது அன்பு மகனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியையும் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜி.பி முத்து. இநத் போட்டோவிற்கு லைக்ஸ்களும், “தலைவரே..வி லவ் யூ” போன்ற கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது.