டெல்லியில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் துரத்திச் சென்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 25 வயது இளைஞரைக் கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை காவல்துறை உறுதி செய்துள்ளது. சுவரி ல் சிறுநீர் கழிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கொலை சம்பவம் நிகழ்ந்தது.


 






ஹோட்டல் மேலாண்மை பிரிவு மாணவராக உள்ள மயங்க், குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டின் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். அதுமட்டுமின்றி, குற்றம்சாட்டப்பட்டவரின் தாயாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட குற்றம்சாட்டப்பட்டவரை தகாத வார்த்தைகளை சொல்லி திட்டியும் அறைந்தும் உள்ளார் மயங்க்.


பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் தனது நண்பர்களை அழைத்து மயங்க் மற்றும் அவரது நண்பர் விகாஸ் ஆகியோரை துரத்தி சென்றுள்ளார். தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள டிடிஏ மார்க்கெட் அருகே மயங்கைப் பிடித்து பொதுமக்கள் பார்க்கும் வகையில் கத்தியால் குத்திக் கொன்றனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.


 






இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மயங்க் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர்களான மணீஷ், ராகுல், ஆஷிஷ் மற்றும் சூரஜ் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர். காவல்துறையினர் முதலில் ராகுல், ஆஷிஷ் மற்றும் சூரஜ் ஆகியோரை கைது செய்தனர்.


விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்திற்கான காரணத்தை ஒத்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண