டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, தேவையற்று கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் டெல்லியின் எல்லைகளிலிருந்து நகரத்திற்கு உள்ளே செல்லாது இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.


 






டெல்லி காவல்துறையினரைத் தவிர, சிங்கு, திக்ரி மற்றும் காஜிபூர் உள்ளிட்ட எல்லைகளில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


ரயில் பாதைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பாரிய அளவில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பயணிகள் சில வழித்தடங்களைத் தவிர்க்குமாறு டெல்லி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.


நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டி, சுமார் 40 விவசாய அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு குடை அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா விவசாயிகளின் "மகாபஞ்சாயத்" க்கு அழைப்பு விடுத்துள்ளது.


 






பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டு காலமாக நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த வாரம், 2021 வன்முறை வழக்கில் நீதி கோரி உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது சம்யுக்த் கிசான் மோர்ச்சா. கடந்த ஆண்டு அக்டோபரில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷால் கார் ஏற்றி கொல்லப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஞாயிற்றுக்கிழமை, 'மகாபஞ்சாயத்தில்' பங்கேற்பதற்காக தேசிய தலைநகருக்குள் நுழைய முயன்ற விவசாய தலைவர் ராகேஷ் திகைத் காஜிபூர் எல்லையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


"கடைசி மூச்சு வரை இந்தப் போராட்டம் தொடரும். நிற்காது, சோர்வடையாது, பணிந்து போகாது" என்று பின்னர் ராகேஷ் திகைத் விடுதலை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட பிறகு இந்தியில் ட்வீட் செய்தார். மத்திய அரசின் கட்டளைப்படி டெல்லி போலீசார் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.