உத்தரப்பிரதேசத்தில் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாக கணவர் மீது பெண் புகாரளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முசாபர்நகரில் உள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், குருகிராமில் வசிப்பவரும், தொழிலதிபருமான தனது கணவர் என்னை மிரட்டி டெல்லியில் நடக்கும் விருந்துகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதாகவும், தனது சொந்த சகோதரனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உத்தரபிரதேச போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்த நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இருவரும் குருகிராமுக்கு குடிபெயர்ந்துள்ளனர். அந்த நபர் இப்பெண்ணுக்கு 2வது கணவர் ஆவார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் பலவற்றை முன்வைத்தார்.
அதாவது மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நான் செல்ல மறுத்தால் என் கணவர் என்னைத் தாக்குவதோடு மட்டுமல்லாமல் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்வார். பல நாட்களாக இந்த சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த நான் குருகிராமில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகாரளிக்க முயன்றேன். ஆனால் என் கணவரின் அடியாட்கள் என்னை வழிமறித்தனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர் என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் முதற்கட்டமாக அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் மீது சட்டப்பிரிவு 376 (கற்பழிப்பு), 307 (கொலை முயற்சி), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என நியூ-மண்டி காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல் பிரிவு 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவை கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குருகிராமில் நடந்ததால் விரைவில் வழக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மனைவியை மாற்றிக் கொள்ளும் நிகழ்வுகள் சகஜமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் சென்னை, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்நிகழ்வுகள் நடந்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்