கர்நாடகாவில் பெண் வழக்கறிஞர் ஒருவரை அவரது பக்கத்து வீட்டுக்காரர்  பலமுறை அடித்து உதைத்துள்ளார். அந்த நபர் வழக்கறிஞரை பொது இடத்தில் தாக்கியும், யாரும் அவரை காப்பாற்ற வராத சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே பட்டப்பகலில் பெண் வழக்கறிஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி, தலைமுடியை இழுத்து, சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்தனர். எனினும், பெண் வழக்கறிஞரின் கணவர், தாக்குதலின்போது உதவி கோரிய பின்னரும் எவரும் உதவ முன்வரவில்லை.


வழக்கறிஞர் சங்கீதா ஷிக்கேரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர் அவரது அண்டை வீட்டாரான மஹந்தேஷ் சோளச்சகுடா ஆவார். சிவில் தகராறு வழக்கு தொடர்பாக தனிப்பட்ட பகை காரணமாக மகாந்தேஷ் வழக்கறிஞரை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். வழக்கறிஞர் தன்னை சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக அவர் கூறினார். இதற்கு முன்பும் மகந்தேஷ் மற்றும் சங்கீதாவின் குடும்பத்தினர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், சங்கீதாவை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மஹாந்தேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


வீடியோ:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண