கர்நாடகாவில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய வழக்கில் கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்து யாதகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள கெம்பாவி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு இளைஞர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அப்பெண் இரண்டாவதாக கருத்தரித்து சில தினங்களுக்கு முன் குழந்தை பெற்றார். இப்படியான நிலையில் அக்காவுக்கு உதவியாக தங்கையான 16 வயது சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார். அக்கா, இரண்டு குழந்தைகளை கவனித்து கொண்டதுடன் வீட்டு வேலைகளையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மனைவி குழந்தை பெற்றிருந்ததால் அவருடன் கணவனால் தனிமையில் நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் மனைவியின் தங்கை மீதும் அந்த நபருக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது. தன் வீட்டில் இருந்ததால் அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொள்ள தொடங்கியுள்ளார். அக்காவிடம் சொன்னால் பிரச்னையாகி விடும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக யாரிடமும் கூறினால் அக்காவையும், குழந்தைகளையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் பலமுறை சிறுமியை அந்த இளைஞர் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மகளை காண வந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்க பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அந்த சிறுமியிடம் விசாரிக்க அக்கா கணவன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அச்சிறுமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கெம்பாவி காவல் நிலையத்தில் தனது மருமகன் மீது புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். கருத்தரித்த சிறுமிக்கு உரிய சிகிச்சையும், கவுன்சிலிங்கும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சம்பவங்கள்
தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருவது கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை இந்த விஷயத்தில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.