மேகலாயாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 சட்டமன்ற அதிருப்தி உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். இதன்மூலம், ஒரே நாள் இரவில் மேகலாயவின் சட்டமன்ற எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் உருவாகிறது.
மேகாலயா காங்கிரஸின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், தற்போதைய மேகலாயவின் 10-வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்கமாவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இது, காங்கிரஸ் கட்சியை மிகவும் பலவீனப்படுத்தும் என்று கருதப்படுகிறது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான கான்ராட் சங்கமா தளமையிலான கூட்டணி கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. 20 உருப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியாக விளங்குகிறது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மேகாலயா நாடளுமன்ற உறுப்பினர் வின்சென்ட் ஹெச்.பாலா மேகாலாய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த முகுல் சங்கமா (தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்) எதிர்ப்புக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்தார். கடந்த சில மாதங்களாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து வந்தார். எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் கட்சி மாறாலாம் என்று கணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 17 உறுப்பினர்களுடன் சங்கமா திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார்.
மம்தா பேனர்ஜி 2024: நான்கு நாட்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தேசிய அரசியலில் தனது செல்வாக்கை அதிகப்படுத்த துடிக்கும் மம்தா பேனர்ஜி, இந்த டெல்லி பயணத்தை மிகவும் சாதூர்யமாக பயன்படுத்தி வருகிறார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களான கிர்தி அசாத் மற்றும் அசோக் தன்வார் ஆகியோர் மம்தா முன்னிலையில் தங்கள் திரிணாமுல் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அசோக் தன்வார் மூலம் , ஹரியானா அரசியலில் கால்பதிக்கும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் திருணாமுல் காங்கிரஸ் முக்கிய பலம் பொருந்திய கட்சியாக உருவெடுக்கும் என்றும் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் கோவா மாநிலத்திலும் திருணாமுல் காங்கிரஸ் கட்சி கால்பதிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக, கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், கோவா காங்கிரஸ் கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான Luizinho Faleiro மம்தா பேனர்ஜி கட்சியில் இணைத்துக் கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்