முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் ஓய்வுக்கு பிறகு, மத்தியில் ஆளும் பாஜக கட்சியில் இணைந்து கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து வந்தார். 


இந்தநிலையில், கெளதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.நேற்று கம்பீரின் தனிப்பட்ட ஏ-மெயில் பக்கத்திற்கு  ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து  கொலை மிரட்டல் வந்துள்ளது. 


இதனால் கெளதம் காம்பீர் இமெயில் தொடர்பாக டெல்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், எனக்கும், என் குடும்பத்திற்கு ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து வந்துள்ளது. இதன் காரணமாக  இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 


இந்த மெயில் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தியாவில் இதுவரை ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற எந்தவொரு தீவிரவாத அமைப்பு உருவாகவில்லை. இதற்கு பிறகு புதியதாக உருவெடுக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். 



மேலும், ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற பல்வேறு நாடுகளில் 'ஐஎஸ்ஐஎஸ்' என்ற  பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கௌதம் கம்பீரின் செயலாளர் கௌரவ் அரோரா டெல்லி காவல்துறையினருக்கு எழுதிய கடிதத்தில், கௌதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கௌதம் கம்பீர் பல நாட்களாக பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்துவருகிறார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை அந்த நாட்டுடன் எந்தவித உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார் அது தான் மிரட்டலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என்று தெரிவித்தார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண