கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து தேசிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. முன்னதாக கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது  மேற்குவங்கத்தில் அகதிகளின் சட்டவிரோத ஊடுருவல் பிரச்சினையை- தேர்தல் களத்தில் பெரிதாக பேசியது பாஜக. பாஜகவுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில் அங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அமித்ஷா மேற்கு வங்கத்தில் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.  கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.


மக்களின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மம்தாவுக்கு 3வது முறையாக ஆட்சி பொறுப்பை கொடுத்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை மிக ஏழ்மையான நிலைக்கு அவர் தள்ளவிட்டார் என்றும், 2011ம் ஆண்டு 7 வது இடத்தில் இருந்த மேற்கு வங்கத்தை தற்போது 23வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.


இதற்கு பதிலடியாக பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 2024ல் பாஜக ஆட்சிக்கு வராது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய எதுவும் அமல்படுத்தப்படாது. குடிமக்களின் உரிமைகள் பறிபோவதை நான் விரும்பவில்லை, நாம் ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே ஆளுநருக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அமித்ஷாக்கு எதிரான இந்த பதிலடியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண