மலையாள நடிகர் பிரதீப் கோட்டயம் (இன்று) வியாழக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 61. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை மாரடைப்பால் இறந்தார்.






நடிகர் பிரதீப் கோட்டயம் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை அம்சத்தை கையாளும் திறமை கொண்டு வந்ததற்காக அவரது நடிப்பு பெரும்பாலும் பாராட்டப்பட்டது. பிரதீப் 2001 ஆம் ஆண்டு IV சசி திரைப்படமான ‘ஈ நாடு எனலே வரே’ மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.இவரது மறைவு குறித்து பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் உன்னி முகுந்தன் சமூக வலைதளங்களில் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 







இவர் தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் மாமா கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும், மலையாளத்தில் தட்டத்தின் மறையது, ஒரு வடக்கன் செல்ஃபி, வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், அமர் அக்பர் ஆண்டனி, ஜோசுட்டி வாழ்க்கை, குஞ்சிராமாயணம், கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன், ஆடு ஒரு பீகரா ஜீவி ஆணு, மற்றும் ஆதி கப்யரே கூட்டமணி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 


நடிகர் பிரதீப் கோட்டயதிற்கு மாயா பிரதீப் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Also Read | Rasi Palan Today, Feb 17: மேஷத்துக்கு எச்சரிக்கை.. மீனத்துக்கு அமைதி.. இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண