தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய 19 பேர் திமுகவில் நீக்கம். அதிமுகவில் 18 பேர் நீக்கம்
- ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்த டெபாசிட் செய்த ரூ.68 கொடியை திரும்ப பெற தமிழ்நாடு அரசு மனு
- தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களாக வாரிசுகளை நியமிப்பதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை : உயர்நீதிமன்றம் கருத்து
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
- திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியா:
- ஒருவர் கூட பசியால் வாடகூடது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி
- 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் கட்டாயம் - மத்திய அரசு
- டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருந்து வரும் நிலையில், அங்கு தற்போது காற்றின் தரக்குறியீடு 235 ஆக பதிவாகியுள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30, 615 பேருக்கு கொரோனா தொற்று - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
உலகம்:
- பிரேசிலில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழப்பு
- ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 உதவித்தொகை- அதிபர் அல்டெல்மத்ஜித் அறிவிப்பு
- அமெரிக்கா- ரஷ்யா என இருநாடுகளின் படைகளும் உக்ரைனுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி- யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
- 13 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனை தாக்கிய ‘லஸ்ஸா’ காய்ச்சல்
- அமெரிக்க பில்லினர் ஜேரட் ஐசக்மேன் அறிவித்த விண்வெளிப் பயணத்தில் கேரளாவைச் சேர்ந்த இன்ஜினியர் அன்னா மேனன் இடம்
விளையாட்டு:
- கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்