மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 


முன்னதாக, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பூர்வாங்க விசாரணையை மேற்கொள்ள மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐ அமைப்புக்கு  உத்தரவிட்டது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசின் உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், உடனடியாக முதல் தகவல் அறிக்கயை சிபிஐ பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்தது. 


மும்பை விடுதிக்காரர்கள் மற்றும் கடைக்காரர்களிடமிருந்து மாதம் ரூபாய் 100 கோடி பணம் வசூலித்து தருமாறு மும்பை மாநகர காவல்துறையை அனில் தேஷ்முக் நிர்பந்தித்ததாக காவல் துறை ஆணையர் பரம் வீர் சிங் குற்றம் சாட்டினார். அனில் தேஷ்முக் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதி விசாரனை செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கேரேவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார். 


 



 


இதற்கிடையே, கடந்த மார்ச் 30ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி கைலாஷ் சண்டிவால் தலைமயிலான உயர்மட்ட விசாரணைக் குழுவை மகாராஷ்டிரா அரசு  நியமித்தது. 


அனில் தேஷ்முக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜிமானா செய்தார்.