புனேவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ரேணுகா டெங்லே என்ற ஐந்து மாத கர்ப்பிணி பெண், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷமுள்ள 'சா-ஸ்கேல்டு விப்பர்' பாம்பு அவரை கடித்துள்ளது. 


இதையடுத்து, அந்த பெண்ணின் உறவினர்கள் அவரை உள்ளூர் பேயோட்டும் சாமியார் மற்றும் அருகிலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவருக்கு அங்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


இந்த நிலையில், ரேணுகா டெங்லேவின் உறவினர்கள் இதுவரை 5,500க்கும் மேற்பட்ட பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றிய தம்பதியினரான டாக்டர் சதானந்த் ராவுத் மற்றும் அவரது மனைவி பற்றி தெரிந்துள்ளனர். 


உடனடியாக அந்த பெண்ணை இவர்கள் நடத்தும் மருத்துவமனைக்கு உடல் முழுவதும் வீக்கத்துடன் மோசமான நிலையில் கொண்டு வந்து அனுமதியளித்துள்ளனர். தொடர்ந்து உயிருக்கு போராடிய அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவ தம்பதியினர் மீட்டுள்ளனர். 


இதுகுறித்து அந்த தம்பதியினர் தெரிவிக்கையில், “உடனடியாக பாம்புக்கு எதிரான விஷத்தை செலுத்தி சிகிச்சையைத் தொடங்கினோம். அந்தப் பெண் பதிலளித்து அதிசயமாக குணமடைந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது” என்று தெரிவித்தனர். 


பாம்புக்கடியை கிராமப்புற ஆபத்து பற்றிய கூறிய டாக்டர் ராவுத், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 58,000 பாம்புக் கடி இறப்புகள் ஏற்படுவதால், அத்தகைய உயிரிழப்புகளில் நாடு முன்னணியில் உள்ளது. 2018 ம் ஆண்டு முதல் பாம்புகடி மிகவும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய் என்றும், 2030 ஆம் ஆண்டில் பாம்புக்கடி இறப்புகளை 50 சதவிகிதம் குறைப்பதே உலக சுகாதார நிறுவனம் (WHO) நோக்கம் என்றும் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய டாக்டர் ராவுத், நானும் எனது மனைவியும் பின்னர் நாட்டின் கிராமப்புறங்களில் வசிப்பவர்களின் அன்றாட யதார்த்தமான பாம்புக்கடி பிரச்சினைக்கு வேலை செய்ய முடிவு செய்தோம் என்று தெரிவித்தார். 


வென்டிலேட்டர்கள், டிஃபிபிரிலேட்டர்கள், பாம்பு விஷ எதிர்ப்பு டோஸ்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பயிற்சி பெற்ற பணியாளர்கள் போன்ற வசதிகளுடன் எங்கள் மருத்துவமனையை உருவாக்கும்போது, கிராமப்புறங்களில் பாம்புக்கடிக்கு சிகிச்சையளிப்பதில் கட்டுக்கதைகளை உடைத்து அறிவியல் ரீதியான முறைகளை ஊக்கப்படுத்தினோம்.


இன்று, இப்பகுதியிலிருந்து யாரும் பாம்பு கடித்தால் பேயோட்டும் சாமியார்களிடம் செல்வதில்லை. ஒரு நபர் பாம்புக்கடிக்கு ஆளானால், அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். சாமியார்களிடம் இல்லை. பாம்புக்கடி சம்பவங்களைத் தவிர்க்க மருந்துதான் முக்கியம் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 


அதேபோல், பொதுமக்கள் வேலை செய்யும் போது கையுறைகளை அணியவும், தரையில் தூங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் வலையுடன் படுக்கைகளைப் பயன்படுத்தவும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் மருத்துவர் தெரிவித்தார்.