மகாராஷ்டிரா முதலமைச்சர் ஹிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியாக பாஜக எம்.எல்.ஏ சுட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றன.


அல்காஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடத்த பேச்சுவார்த்தையின்போதே பாஜக எம்.எல்.ஏ துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மகேஷ் கெய்க்வாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


என்ன நடந்தது..? 


மகாராஷ்டிர மாநிலம் உலாஸ்நகரில் சிவசேனா பிரிவுத் தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.


நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவர் ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட் மற்றும் நகர தலைவர் மகேஷ் கெய்க்வாட் ஆயியோர் அல்காஸ் நகர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் அனில் ஜக்தாபுடன் உரையாடி கொண்டிருந்தபோது, பாஜக எம்.எல்.ஏ கண்பத் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டு மகேஷ் கெய்க்வாட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 






இந்த சம்பவம் தொடர்பாக டிசிபி சுதாகர் பதரே தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தில் சிவசேனா எம்எல்ஏ மகேஷ் கெய்க்வாட் படுகாயமடைந்து தானே ஜூபிடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகேஷ் கெய்க்வாட் மற்றும் கண்பத் கெய்க்வாட் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு, புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, ​​அவர்கள் இருவரிடையே பேச்சுவார்த்தை நடந்தபோது மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது ஆதரவாளர்களை நோக்கி கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது" என்று கூறினார்.


இதற்கிடையில் சிவசேனா (UBT) தலைவர் ஆனந்த் துபே, '3-இன்ஜின் அரசாங்க அதிகாரம் கொண்ட இந்த ஆட்சியில் துப்பாக்கிச் சூடாது காவல் நிலையத்திற்குள் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட். துப்பாக்கியால் தாக்கப்பட்டவர் சிவசேனா ஷிண்டே அணி தலைவர் மகேஷ் கெய்க்வாட் இருந்தார். லட்சக்கணக்கான மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டிய எம்.எல்.ஏ., சுடுவது துரதிர்ஷ்டவசமானது.3 இன்ஜின் ஆட்சியில் இரு கட்சி தலைவர்கள் சண்டையிட்டுக் கொல்ல முயற்சி செய்கின்றனர். ."