தமிழ்நாடு:

  • மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
  • தமிழக வெற்றி கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய் - நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவிப்பு
  •  புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு, தமிழக மற்றும் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
  • சினிமா துறையில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் - ரசிகர்கள் ஏமாற்றம்
  • சனாதன விவகாரம் - அமைச்சர் உதயநிதி மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
  • தமிழக சட்டசபை கூட்டத்தொடர் - ஆளுநர் ரவிக்கு சபாநாயகர் அப்பாவு முறைப்படி அழைப்பு
  • நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை - விசாரணைக்கு ஆஜராகும்படி சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் 
  • திருச்சி - அகமதாபாத் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 5 வாரங்களுக்கு நீட்டிப்பு

இந்தியா:

  • மாலத்தீவில் உள்ள ராணுவப் படைகளை திரும்பப் பெற இந்தியா ஒப்புதல் - இருநாட்டு தூதரக அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
  • 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே I.N.D.I.A. கூட்டணி - காங்கிரஸ் விளக்கம்
  • ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளித்துள்ள அரசியல் சாசன பிரிவை திருத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி., வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்
  • புத்தாண்டு லாட்டரி குலுக்கல் - சபரிமலைக்கு சென்றிருந்த புதுச்சேரியை சேர்ந்த ஐயப்ப பக்தருக்கு ரூ.20 கோடி பரிசு
  • சபரிமலை அருகே பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி - கேரள முதலமைச்சர் தகவல்
  • வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு - கனடா முதலிடம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
  • ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதிவியேற்றார் சம்பாய் சோரன் - ராகுல் காந்தியின் நடைபயணத்திலும் பங்கேற்றார்

உலகம்:

  • ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள போராளிகளின் முகாம்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் - ஜோர்டானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி
  • உலக வங்கியிடம் ரூ.1,244 கோடி கடன் வாங்கும்  இலங்கை
  • தென்கொரியாவிற்கு எதிராக போர் - தயார் நிலையில் இருக்க கிம் ஜாங் அன் உத்தரவு
  • வருகிற 5ம் தேதி இந்தியா வருகிறார் சுவிட்சர்லாந்து வெளியுறவு தலைவர்

விளையாட்டு:

  • இங்கிலாந்து அண்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி - முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை சேர்த்து 336 ரன்கள் சேர்ப்பு
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி அரையிறுத்க்கு தகுதி பெற்றது
  • புரோ கபடி - டெல்லியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ்