Delhi Railway Station Stampede: டெல்லி ரயில்நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகாகும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினத்தை ஒட்டி அங்கு செல்ல நேற்றுஏராளமானோர் டெல்லி ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால், உத்தரபிரதேசத்திற்கு போதுமான ரயில்கள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கிடைத்த ரயில்களில் ஏற முண்டியடித்தனர்.

பொதுமக்கள் முட்டி மோதிக்கொண்டு ரயில்களில் ஏற முயன்றதால் ரயில் நிலையத்தில் கடுக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் மூச்சு திணறி கூட்டத்திற்கு மத்தியிலேயே மயங்கி விழுந்தனர்.
பெண்கள், குழந்தைகள் என பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்களின்படி, 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
புது தில்லி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
புது தில்லி ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து டிராலியில் ஏற்றப்படும்போது, மயக்கமடைந்த ஒரு பெண்.
கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து புது தில்லி ரயில் நிலையத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் குவிந்தன.
கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.