அச்சச்சோ.!கேக் விற்பனையின் போது திடீரென மயங்கி விழுந்து பெரியவர் இறப்பு!

கேக் கடையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்து நபர் இறப்பு.

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பேக்கரியில் 5 ஆண்டுகளாக வேலை செய்து வந்த 56 வயதான  ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு பார்சல்களை வழங்கும்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

சாமராஜநகர் பகுதியில் உள்ள கேக் வேல்டு பேக்கரியில் வேணுகோபால் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கேளராவைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் பிப்ரவரி 12ம் தேதி மாலை, 7:30 மணியளவில், பணியில் இருந்தபோது, ​​திடீரென சரிந்து விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் மாரடைப்பு காரணமாக  இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  56-வயதாக பணியாளர் வேலை பார்த்துகொண்டிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு. அவர் பணி செய்துகொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து சாமராஜநகர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதிஷாவில் உள்ள தனது உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது 23 வயதான பரினீதா ஜெயின் என்ற பெண் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.  இந்தூரில் வசிக்கும் பரினீதா, விதிஷாவில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்ற திருமண விழாக்களில் கலந்து கொள்வதற்காக போபால் சென்றிருந்தார்.  திருமண கொண்டாட்டத்தில் பாடலுக்கு ஆடிகொண்டிருந்தபோது  திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. அவரை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும் அவர் இறந்துவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவ்த்தனர். 

 


மேலும் வாசிக்க..

மாரடைப்பு பயமா? அபாயத்தை தடுக்க இதை கண்டிப்பா பின்பற்றுங்க மக்களே..

Continues below advertisement
Sponsored Links by Taboola