கோடிக்கணக்கான மக்கள் சென்று புனித நீராடும் பிரயாக்ராஜ்ஜில் உள்ள திரிவேணி சங்மமான கும்ப மேளா நிகழ்வில், எப்படி தூய்மையான கிடைக்கிறது என்பது குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.
மகா கும்பமேளா:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இந்த மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது. அங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் ஆன்மீக அமைதியை அடைய கங்கை நதியில் நீராடுகிறார்கள்.
Also Read: Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
தூய்மையான குடிநீர்
இந்நிலையில் தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்குவது குறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “ பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) மூலம் குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஜனவரி 21 முதல் பிப்ரவரி 1 வரை இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Maha Kumbh Mela-Nasa: விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா.! கிளிக் செய்த இஸ்ரோ, நாசா...
கட்டணமில்லா குடிநீர்
யாத்ரீகர்களின் வசதியை உறுதி செய்வதற்காக, நிர்வாகம் இந்த கட்டணமில்லா குடிநீர் விநியோகத்தை வழங்கி வருகிறது. தொடக்கத்தில் இந்த சேவைக்காக லிட்டருக்கு ரூபாய் 1 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதைப் பெறுவதற்காக பக்தர்கள் நாணயங்களைச் செலுத்தலாம், அல்லது யுபிஐ ஸ்கேனிங்கை பயன்படுத்தியும் குடிநீரைப் பெறலாம்.
இருப்பினும், பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தூய்மையான தண்ணீரைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இந்த சேவை இப்போது முற்றிலும் கட்டணமில்லாமல் மேற்கொளள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.