டெல்லி சட்டப்பேரவையில் உள்ள 70 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் , இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி 57.70% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கையானது வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மும்முனை போட்டி
டெல்லி ஒன்றிய பிரதேசமாக இருந்தாலும், சட்டப்பேரவையை கொண்டுள்ள சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும் , இந்திய நாட்டின் தலைநகரமாகவும் இருப்பதாலும், இந்திய அரசியலில் மத்தியிலும் - மாநிலத்திலும் மிகுந்த கவனம் பெற்றவையாகவும் உள்ளது.
மேலும் , சட்டப்பேரவையில் 70 தொகுதிகளும், மக்களவையில் 7 தொகுதிகள் என குறைந்த அளவில் இருந்தாலும், மிகுந்த அதிகாரம் உள்ள இடமாக, டெல்லி திகழ்கிறது என்றே சொல்லலாம். இதனால், இந்த தேர்தலும் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இத்தேர்தலில் ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையேயான மும்முனை போட்டி நிலவுகிறது. மும்முனை போட்டி என்றாலும் , ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையேயான போட்டிதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, கருத்து கணிப்புகளும், அவ்வாறே உணர்த்துகின்றன.
இந்த தருணத்தில் 4வது முறையாக தொடர்ந்து ஆட்சி பீடத்தில் தொடரும் முனைப்பில் ஆம் ஆத்மியும்; 27 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியை பிடிக்க வேண்டிய கவுரவ பிரச்னையில் பாஜகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை, தற்போது வெளியிட்டுள்ளன.
அதில், மேட்ரிக்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளதாவது
மேட்ரிக்ஸ் நிறுவனம் கணிப்பின்படி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வெற்றி தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 35 முதல் 40 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஆம் ஆத்மி கூட்டணிக்கு 32 முதல் 37 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக ஒரு தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணித்துள்ளது. இதன் மூலம், பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது.
NDTV கருத்து கணிப்பு:
என்.டி.டி,வி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 35 முதல் 40 தொகுதிகளிலும்; ஆம் ஆத்மி 32 முதல் 37 தொகுதிகளிலும்; காங்கிரஸ் ( 0- 2 ) தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
CNN கருத்து கணிப்பு:
சி.என்.என் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி அதிகபட்சமாக 44 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 30 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும்; காங்கிரஸ் ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறாது எனவும் கணித்துள்ளது.
POLL DIARY: கருத்து கணிப்பு
TIMES NOW கருத்து கணிப்பு முடிவுகள்
CHANAKYA-சாணக்யா கருத்து கணிப்பு:
PEOPLES PULSE-கருத்து கணிப்பு:
P Marq-கருத்து கணிப்பு:
Wee Preside-கருத்து கணிப்பு:
MIND BRINK- கருத்து கணிப்பு:
REPUBLIC: கருத்து கணிப்பு முடிவுகள்
பல நிறுவனங்கள் அளித்த கருத்து கணிப்பு முடிவுகளில், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன. அதில் மைண்ட் பிரிங் மற்றும் வீ பிரசீடு ஆகிய நிறுவனங்கள் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளன.
டெல்லி தேர்தல் தாக்கங்கள்
இத்தேர்தலில், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு, யமுனை நதி, காற்று மாசுபாடு, இலவசமாக கல்வி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், போக்குவரத்து மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு போன்றவை முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலித்ததை பார்க்க முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட தலைவர்கள் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்து கடுமையான தாக்குதலை நடத்தினர்.
ஹரியானா பாஜக அரசால் யமுனை நதி மாசுப்படுத்துகிறது என்றும், டெல்லி சட்ட ஒழுங்கில் அமித்சாவை குற்றம் சாட்டியும், ஆட்சியை பிடிப்பதற்காக பொய் குற்றச்சாடுகள் மோடி அரசு ஈடுபடுகிறது எனவும் கெஜ்ரிவால் பாஜக மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
மேலும், மக்களவை தேர்தலில் இந்திய கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இருந்தாலும், டெல்லி தேர்தலில் தனித்து போட்டியிட்ட நிலையில், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை வைத்ததையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி, மக்கள் அளித்த வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.