பல்வேறு மொழிகள் பேசப்படும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். பழமை வாய்ந்த பல்வேறு மொழிகளின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. சில மொழிகளில் சில பொதுவான சொற்கள் உள்ளன. ஆனால், கிழக்கு அல்லது வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் தென்னிந்தியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன.






இந்த சூழலில், அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர், மெட்ராஸ் படைப்பிரிவு ராணுவ வீரருடன் தமிழில் தெளிவாக உரையாடுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்த உரையாடலின் வீடியோவை அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மருத்துவர் லாம் டோர்ஜி, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ வீரருடன் சரளமான தமிழில் பேசுவதை பார்க்கலாம். தமிழை கற்பதற்கு முன்பு பல ஆண்டுகளாக, லாம் தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றதாக காண்டு குறிப்பிட்டுள்ளார்.


தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங்கில், ராணுவ வீரரும் மருத்துவரும் முதன்முதலில் சந்தித்தபோது தமிழில் பேசிக் கொள்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. 


வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காண்டு, "தமிழ்நாட்டில் லாம் டோர்ஜி மருத்துவம் பயின்றுள்ளார். மெட்ராஸ் படைப்பிரிவு வீரரிடம் சரளமாக தமிழில் பேசி அவரை ஆச்சரியப்படுத்தினார். அவர்கள் தவாங்கில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஓம்தாங் என்ற இடத்தில் சந்தித்தனர்.






உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு என்ன ஒரு உதாரணம்! நமது மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமை கொள்கிறோம்.


இதற்கிடையில், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பயனர்கள், பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். "இது இந்தியாவின் பலம்" என பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ​"இப்படிதான் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும்" என ​மற்றொரு பயனர் கருத்து பதிவிட்டுள்ளார்.