MP Train Accident : மத்திய பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் ஷாதூல் நகரில் சிங்பூர் ரயில் நிலையம் அருகே இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேரு மோதி இன்று காலை விபத்து ஏற்பட்டது. இரண்டு ரயில்கள் மோதி வேகத்தில் ஒரு  ரயிலின் என்ஜின் மற்றொரு ரயிலின் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் ஒரு ரயிலின் எஞ்ஜின் தீப்பிடித்து ஏரிந்தது. 






இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் உட்பட 5  பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த விபத்து காரணமாக பல ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பிலாஸ்பூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் கட்னி பகுதிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் மத்திய பிரதேசத்தின் ஷாஹ்டேல் மாவட்டம் சிங்கூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.


இதில் ரயில் தீ பிடித்து ஏரிந்தது. இதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த ரயில் ஓட்டுநர் பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பிரசாத் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.




மேலும் படிக்க


”இன்று பில்கிஸ்; நாளை யாரா வேணா இருக்கலாம்; எந்த விதியை கடைபிடிச்சீங்க?” - மத்திய அரசை வறுத்தெடுத்த உச்ச நீதிமன்றம்..!


தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய அதிரடி..! சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அனுமதியா?