மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு அலுவலகம் அருகே பட்டப்பகலில் ஆர்டிஐ ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


விதிஷாவில் உள்ள பொதுப்பணித் துறை (PWD) அலுவலகம் முன் வியாழக்கிழமை மதியம் 36 வயதான தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அசோக் நகரில் வசிக்கும் ரஞ்சீத் சோனி, ஆர்டிஐ ஆர்வலராகவும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும் இருந்தார்.


மேலும் படிக்க: Priyanka Gandhi Corona Positive: நேற்று சோனியா! இன்று பிரியங்கா! 'காந்தி' குடும்பத்தை துரத்தும் கொரோனா!


ஆர்டிஐ ஆர்வலர் சுட்டுக்கொலை


முன்னதாக அரசு ஒப்பந்ததாரராக பணிபுரிந்த தகவல் அறியும் உரிமைச் செயல்பாட்டாளர் ஒருவர் வியாழக்கிழமை மாலை, பொதுப்பணித் துறை (PWD) அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் ரஞ்சீத் சோனி (42) என அடையாளம் காணப்பட்டார் . சோனி அசோக்நகர் மாவட்டத்தில் வசிப்பவர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா சுக்லா தெரிவித்தார். 


மேலும் படிக்க: Priyanka Gandhi Corona Positive: நேற்று சோனியா! இன்று பிரியங்கா! 'காந்தி' குடும்பத்தை துரத்தும் கொரோனா!


பொதுப்பணித் துறை அலுவலகத்தின் போர்டிகோவில் அவர் பின்னால் இருந்து தலையில் சுடப்பட்டதாக அவர் கூறினார். பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படாததால், சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் காட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர் என எஸ்பி தெரிவித்தார். தனிப்பட்ட பகையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சமீர் யாதவ் தெரிவித்தார். சோனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அடிக்கடி அரசுப் பணிகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தார் என்றும் கூறினார்.


மேலும் படிக்க: Liquor Delivery: ஆர்டர் பண்ணுங்க போதும்.. 10 நிமிஷத்துல வீட்டுல மதுபானம்! உற்சாகத்தில் மது பிரியர்கள்!


மேலும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே கொலைக்கான நோக்கம் தெரியவரும் என்றும் கூறினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண