காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருடைய மகள் பிரியங்கா காந்திக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக பிரியங்கா காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆகவே நான் அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முறையாக பரிசோதனை செய்து கொள்ளவும்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகிருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன் தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார். அதில், “எங்களுடைய தலவிஅர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் தென்பட்டது. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு வரும் 8ஆம் தேதி அமலாக்கத்துறை ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். வரும் ஜூன் 9ஆம் தேதி நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஆர்டர் பண்ணுங்க போதும்.. 10 நிமிஷத்துல வீட்டுல மதுபானம்! உற்சாகத்தில் மது பிரியர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்