LVM3 Rocket: எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கையோளகளுடன் விண்ணில் செலுத்துகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சசி நிறுவனம்.


எல்.வி.எம்-3


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அதிக எடைகொண்டதில் ஜி.எஸ்.எல்.விக்கு பிறகு அதே ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் தான் எல்.வி.எம்.எம்.-3.  இஸ்ரோ வடிவமைத்ததிலேயே ஜி.எஸ்.எல்.விக்கு பிறகு எல்.வி.எம்.எம்.-3. அதிக எடை கொண்டது என்று கூறப்படுகிறது.


நாளை விண்ணில் பாயும் எல்.வி.எம்-3


இந்நிலையில், ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹர்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது. 






எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட்டானது 43.5 மிட்டர் உயரம் உள்ளது. மேலும், 36 செயற்கைகோள்களின் மொத்த எடையானது 643 டன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  5,805 கிலோ எடையுள்ள 36 Gen1 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு நாளை காலை 9 மணிக்கு விண்ணில் பாயவுள்ளது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் ஏரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .



ஒட்டுமொத்தமாக எல்.வி.எம்-3 ராக்கெட்டின் ஆறாவது பயணம் இதுவாகும். அதேநேரம், வணிகமுறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இரண்டாவது முறையாகும். இவ்வளவு குறுகிய கால இடைவெளிக்குள் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும். 


விண்வெளிப் பொருளாதாரம்:


மேலும், இணைய சேவை நிறுவனமான oneWeb நிறுவனம் ஆனது SpaceX, Arianespace மற்றும் ISRO ஆகியவற்றின் ஏவுதல் சேவைகளைப் பயன்படுத்தி அதன் முதல் தலைமுறை விண்மீன் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துகிறது.  இதுவரை ஒன்வெப் நிறுவனத்திற்காக 17 முறை வெவ்வேறு நிறுவனங்களால் ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மேலும் ஒரு ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்படுவது 18வது முறையாகும்.


இதுபற்றி வெளியான செய்திக் குறிப்பில், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் விண்வெளிப் பெருளாதாரம் சுமார் 13 பில்லியன் டாலர் (ரூ.1.07 லட்சம் கோடி) வருமானத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கைக்கோள் மற்றும ஏவுதள சேவைகளுக்கு 13 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக வின்வெளி சேவைகள் ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.