LVM3 Rocket:  ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹர்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.  

எல்.வி.எம்-3

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அதிக எடைகொண்டதில் ஜி.எஸ்.எல்.விக்கு பிறகு அதே ரகத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் தான் எல்.வி.எம்.எம்.-3.  இஸ்ரோ வடிவமைத்ததிலேயே ஜி.எஸ்.எல்.விக்கு பிறகு எல்.வி.எம்.எம்.-3. அதிக எடை கொண்டது என்று கூறப்படுகிறது.

விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்-3

இந்நிலையில், ஆந்திரபிரதேசம் ஸ்ரீஹர்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட் இன்று காலை 9 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம்-3 (LVM3) ராக்கெட்டானது 43.5 மிட்டர் உயரம் உள்ளது. மேலும், 36 செயற்கைகோள்களின் மொத்த எடையானது 643 டன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  5,805 கிலோ எடையுள்ள 36 Gen1 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு  விண்ணில் பாய்ந்தது.

வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் ஏரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  5,805 கிலோ எடையுள்ள 36 Gen1 செயற்கைக்கோள்களைச் சுமந்து விண்ணில் பாய்ந்தது. வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பில் ஏரிமலை செயல்பாடு குறித்து கண்டறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என்று விண்வெளி ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக எல்.வி.எம்-3 ராக்கெட்டின் ஆறாவது பயணம் இதுவாகும். அதேநேரம், வணிகமுறையில் இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவது இரண்டாவது முறையாகும். இவ்வளவு குறுகிய கால இடைவெளிக்குள் இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதும் இதுவே முதல்முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

"ராக்கெட் திட்டம் வெற்றி"

மேலும், இணைய சேவை நிறுவனமான oneWeb நிறுவனம் ஆனது SpaceX, Arianespace மற்றும் ISRO ஆகியவற்றின் ஏவுதல் சேவைகளைப் பயன்படுத்தி அதன் முதல் தலைமுறை விண்மீன் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துகிறது.  இதுவரை ஒன்வெப் நிறுவனத்திற்காக 17 முறை வெவ்வேறு நிறுவனங்களால் ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மேலும் ஒரு ராக்கெட் இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது 18வது முறையாகும்.

எல்.வி.எம்-3 ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் சரியாக பயணித்து நிலைநிறுத்தும். மேலும், எல்.வி.எம்-3 ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்கு  குழுவினருக்கு பாராட்டுகள் என்று  இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.