உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உஜ்வாலா திட்டம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு ரூ.200 மானியம் மானியம், மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள்:
உள்ளாட்சிகளால் வழங்கப்படும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான சான்று, ரேஷன் அட்டை, அடையாள ஆவணம் (ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை), சமீபத்திய பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம், ஓட்டுனர் உரிமம், குத்தகை ஒப்பந்தம்,தொலைபேசி/ மின்சார கட்டணம்/ தண்ணீர் கட்டண ரசீது, கடவுச்சீட்டின் நகல், வீடு பதிவுக்கான ஆவணங்கள், LIC பாலிசி, வங்கி/ கடன் அட்டை அறிக்கை
Also Read: மதிப்பெண்கள் எப்படி தனிமனிதனின் வெற்றியை நிர்ணயிக்கிறது? வாழ்வில் GPA முக்கியமானதா?