ஒருபுறம் காதலித்தவர்களையே ஒருவரை ஒருவர் கொலை செய்யும் பல செய்திகளை நாம் காண்கிறோம், மறுபுறம் மரணத்துக்குப் பிறகும் காதலியைக் கைவிடாமல் அவரை மணம் செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நாள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இறந்த தனது நீண்டகாலக் காதலியை அவர் இறந்ததற்குப் பிறகு திருமணம் செய்துகொண்டுள்ளார்.


அஸ்ஸாமைச் சேர்ந்த பிரார்த்தனா என்ற பெண் உடல்நிலை சரியில்லாமல் கடந்த நவம்பர் 18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். காதலி இறந்த பிறகு மனமுடைந்த அவரது காதலர் பிடுபன் தாமுலி அவரையே மணந்து கொண்டுள்ளார். இறந்த பிரார்த்தனாவின் நெற்றியிலும் கன்னங்களிலும் 27 வயது பிடுபன் தாமுலி குங்குமம் வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  வெள்ளிக்கிழமை கவுகாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரார்த்தனா உயிரிழந்தார்.



அவரைத் திருமணம் செய்துகொண்ட பிடுபன் தனது வாழ்நாள் முழுவதும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரர்த்தனா சில நாட்களுக்கு முன்புதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த உண்மையான அன்பு மற்றும் தியாகம் பலரைக் கண்கலங்கச் செய்துள்ளது.


மெஹ்ராலியில் ஷ்ரத்தா வால்கர் என்பவர் அவரது நீண்டநாள் காதலரான அஃப்தாப் பூனாவாலாவால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அடுத்து இன்றைய தலைமுறையில் அன்பின் வரையறை குறித்து நாம் அனைவரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தோம். ஆனால் அன்பு, மரியாதை, அர்ப்பணிப்பு, தியாகம் போன்ற வார்த்தைகளின் மதிப்பை இழக்கவில்லை என்பதை இந்த காதலர்களின் அர்ப்பணிப்பும், அவர் காதலிக்கான அவரது அன்பும் நிரூபித்துள்ளன.


இறந்த நபரை திருமணம் செய்வது நம்மில் பெரும்பாலோருக்கு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், 'பிரேதா கல்யாணம்' அல்லது 'இறந்தவர்களின் திருமணம்' என்று அழைக்கப்படும் மிகவும் அசாதாரண பாரம்பரியம் இன்றும் நடைமுறையில் உள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் ஒரு சில சமூகங்கள் இன்னும் இந்த சடங்கை உயிருடன் வைத்திருக்கின்றன.


முன்னதாக, டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


35 துண்டுகளாக வெட்டிக் கொலை :


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.


டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.