அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாகவே கோயில் திறப்பு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், நாளை அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்காக அயோத்தி களைகட்டியுள்ளது.
பென்சில் நுனியில் ராமர் சிலை:
பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் உள்பட பலரும் பங்கேற்க இருப்பதால் அயோத்தியில் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக பல வித வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் பென்சில் முனையிலே ஒருவர் ராமர் சிலையை செய்து அசத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் நவரத்னா பிரஜாபதி. இவர் சிற்ப கலைஞர் ஆவார். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அவர் வித்தியாசமான சாதனையை செய்ய நினைத்துள்ளார்.
தானமாக வழங்க முடிவு:
இதையடுத்து, அவர் பென்சில் நுனியில் ராமர் சிலையை வடிவமைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அவர் ஒரு பென்சிலின் நுனியில் அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை செதுக்கியுள்ளார். வெறும் 5 நாட்களில் அவர் இதை செய்து முடித்துள்ளார்.
பிரஜபதி இந்த சிறப்பு வாய்ந்த பென்சிலை அயோத்தி கோயில் அறக்கட்டளைக்கே தானமாக வழங்க முடிவு செய்துள்ளார். இந்த பென்சில் அயோத்தி ராமர் கோயில் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்சில் நுனியில் ராமர் சிலையை வடிவமைத்துள்ள நவ்ரத்னா பிரஜாபதி கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு - எங்கெல்லாம் விடுமுறை? மாநிலங்கள் லிஸ்ட் இதோ!
மேலும் படிக்க: Ram lalla Idol: அயோத்தி கோயிலில் ராமர் சிலையின் முகம் எப்படி இருக்கும்? வெளியான முதல் புகைப்படம்.. பரவசத்தில் பக்தர்கள்