Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடந்த 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு!
Lok Sabha Election 2024 Phase 3 Voting LIVE: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று 93 தொகுதிகளில் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் நடைபெற்ற 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது.
மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி 39.92% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி வரை 25.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்களிப்பதற்கு முன்பாக ராய்ப்பூரில் உள்ள ராமர் கோயிலில் வழிபட்ட சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில், லோக்சபா தேர்தல் 2024 க்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமமான பாகியாவுக்கு வாக்களிக்க உள்ளேன். ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நாடு முழுவதும் மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர்” என தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சி (SP) தலைவர் அகிலேஷ் யாதவ், தனது மனைவியும், மைன்புரி மக்களவைத் தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளருமான டிம்பிள் யாதவ் உடன் உத்தரப் பிரதேசத்தின் சைஃபாயில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்த நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சேலம் சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மக்களவை தேர்தலின் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு - காலை 9 மணி நிலவரப்படி 10.57% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னர் அங்குள்ள காமேஷ்வர் மகாதேவ் கோயிலில் தனது மனைவியுடன் சென்று சிறப்பு பூஜை செய்தார்.
மேற்கு வங்கத்தில் மிரட்டல் மற்றும் வன்முறை எச்சரிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மத்திய உள்துறை அமித்ஷா தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக பிரதமர் மோடி வாக்களிக்கும்போது உடன் சென்ற நிலையில் தற்போது தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள வாக்குச்சாவடி ஒன்று அரண்மனை போல அமைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இப்படியான முறை பின்பற்றப்படுகிறது.
நாட்டு மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அஹமதாபாத்தில் தனது வாக்கினை செலுத்திய பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் 3-வது கட்டத்திற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வரும் நிலையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
Background
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று 93 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 2 கட்டங்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவாம், குஜராத், டையூ & டாமன், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் 1,300க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். இன்றைய வாக்குப்பதிவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -