சென்னை, கலைவாணர் அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா-வின் 5 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது “ திருச்சி சிவாவுக்கு, கல்லூரி காலங்களில் திராவிட கொள்கைகள் மீதான பற்றும், கலைஞரின் பேச்சும் அவரை அரசியலில் ஆர்வம் கொண்டவராக மாற்றியிருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் , சென்னை சிறையில் நான் இருந்தேன், திருச்சி சிறையில் சிவா இருந்தார். சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.