தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் உள்ளது தொடர்பாக மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இதனையொட்டி திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 




நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கியது.  வருகிற 23 ஆம் தேதி கூட்டத்தொடர் நிறைவடைகிறது.   இந்தச் சூழலில், புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகள் வெகுவாக முடங்கின. இன்று அவை தொடங்கியவுடனேயே இரண்டு அவைகளிலும் அமளி நிலவியது.


இந்நிலையில் இன்று (டிச.21) நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் உள்ளது தொடர்பாக மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் மசோதா முக்கிய அம்சங்கள்:
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெற வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.


அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
•  கடந்த நான்கு ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் தகர்த்துள்ளது
• கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தி உள்ளது
• நீட் தேர்வு சமத்துவமின்மையை வளர்க்கிறது 
• சிறப்பு பயிற்சி பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார மற்றும் அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரிக்கிறது
• சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு நிலைநிறுத்தவும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அனைத்து மாணவர்களின் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் சட்டம்  ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. 


இவ்வாறு அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஒப்புதலிக்கு அனுப்பப்பட்டும் பல மாதங்களாக ஆளுநர் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று திமுக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூட்யூபில் வீடியோக்களை காண